தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு வருடம் கழித்து ஜாமின் கிடைத்தது. இவர் ஜாமினில் வெளியே வந்த பிறகு அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் அவர் சாட்சியங்களை கலைக்க கூடும் என்று அமலாக்கத்துறை ஜாமினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சராக பதவி ஏற்க செந்தில் பாலாஜிக்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்ற உச்ச நீதிமன்றம் கூறியதோடு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா இல்லை எனில் ஜாமீன் வேண்டுமா இரண்டில் ஒன்றை மட்டும் தான் தர முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இதைத்தொடர்ந்து தற்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்று சமீபத்தில் பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கடுமையாக சாடியது. அவருடைய திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்த நிலையில் தற்போது அவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இதன் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு செந்தில் பாலாஜியின் மின்சார துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று அமைச்சர் முத்துசாமிக்கு ஆயத்தீர்வைத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.