
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருகிற 25 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இந்த மாநாட்டில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் அரசுடன் அதிகாரம் மோதலுக்காக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படவில்லை. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பும் இதுவும் தவறாக தொடர்புபடுத்தப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரலிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. எதிர்வரும் மாநாட்டுக்கான பணிகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.