திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம். ₹100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இந்த நிலையில் அதே எண்ணிக்கையிலான சேமிப்புக் கடன்களை பதிவு செய்ததற்காக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு மத்திய அரசு முதல் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.