தமிழ்நாட்டுக்கு இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக கூடுதலாக ரூபாய் 522.34 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான புயல் வெள்ள பாதிப்புகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல புதுச்சேரிக்கு 33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.