
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் கொடியை அறிமுகம் செய்து வைத்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை எங்களுடைய சின்னம் என்பதால் உடனடியாக கொடியிலிருந்து யானையை நீக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது பகுஜன் சசமாஜ் கட்சியின் மாநில செயலாளர் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.
அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை அரசியல் நாகரீகம் இல்லாமல் சட்டவிரோதமாகவும் பயன்படுத்தி இருக்கும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக்கழக கொடியில் உள்ள யானை சின்னத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் இன்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனுவினை கொடுத்துள்ளனர். இதனால் யானை சின்னம் குறித்து விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு என்ன என்று பல்வேறு எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் எழுந்துள்ளது.