தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஏராளமான முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிலையில் சுமார் 2500 நிர்வாகிகள் வரை கலந்து கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ், பாஜகவில் இருந்து விலகிய நடிகை ராஞ்சனா நாச்சியார், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் ஆகியோர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில் தற்போது மூன்று முக்கிய புள்ளிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக வந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் திமுகவிடம் ராஜ்யசபா எம்பி சீட் காளியம்மாள் கேட்டதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.