தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா சிறப்பாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று பந்தல்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் தற்போது நடிகர் விஜய் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் நம்முடைய கொள்கைகளை பிரகடனப்படுத்தும் முதல் மாநாடு நடைபெற உள்ளது. மேலும் இந்த மாநாட்டில் கட்சியின் தொடர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.