
மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.