இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இன்று முக்குலத்தோர் பலரும் பசும்பொன் விரைவார்கள் என்பதால் பசும்பொன் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுடகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு இன்று தேவர் ஜெயந்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று தேவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் செல்லும் நிலையில் தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளார். மேலும் இதே போன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று பசும்பொன் சொல்லுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.