சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தொகுதி மறு சீரமைப்பை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்  தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்ட தொடரிலேயே பிரதமர் மோடியை சந்தித்து எம்பிக்கள் குழு மனு அளிக்கும் என கூட்டு நடவடிக்கை குழுவில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் ஏழு மாநிலங்களில் எம்பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது.