நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே 2 மாவட்ட செயலாளர்கள் விலகிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு சீமான் மீது பல பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். அதாவது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட சீமான் வாய்ப்பு தரவில்லை என்று கூறியுள்ளார்.

அதோடு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே எதற்காக வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கேள்வி அனுப்பிய அவர் கட்சியிலிருந்து விலகுவதாக கூறினால் தாராளமாக செல்லுங்கள் என்று சீமான் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நாம் தமிழர் கட்சியில் இருக்கும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்றும், என்னுடைய இஷ்டப்படி தான் தான் செயல்படுவேன் என்றும் சீமான் கூறியுள்ளார். மேலும் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிடில் கிளம்புங்கள் என்று சீமான் கூறியது தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக பூபாலன் கூறியுள்ளார்..