
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நீட் தேர்வை வைத்து மீண்டும் மீண்டும் திமுக அரசியல் செய்து வருகிறது. மக்களிடமும், மாணவர்களிடமும் திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானப் பொய்களின் பட்டியலை தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிட்டது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என தெரிவித்து தப்பித்தனர் என கூறியுள்ளார். இதோ முழு அறிக்கை…
— TVK Vijay (@TVKVijayHQ) April 9, 2025