தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தற்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் இந்திய விடுதலை சுதந்திரத்திற்காக களமாடியவர்.

மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்த துணை நின்றவர். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக்கலை பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலில் முக்கிய அடையாளங்களில் ஒருவராக மாறிய அந்த மகத்தான மனிதரை அவரது குருபூஜை திறநாளில் வாழ்த்தி வணங்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.