
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடியாக சந்தித்து பேசியுள்ளார்.
இதனால் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாமக தலைவர் ராமதாஸிடம் பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தலைவராக இன்று தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.