மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரத்தில் மூன்றரை வயது குழந்தை மீதும் தவறு இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் கூறிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.