
பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக telegram இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியமான பாவெல் துரோவ் தற்போது பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது பிரான்சில் உள்ள போர் கேட் விமான நிலையத்தில் வைத்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் பிரைவேட் ஜெட்டில் அர்பைஜான் நோக்கி சென்ற நிலையில் பாரிஸ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதாவது தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றசாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் சமீபத்தில் விந்தணு தானம் மூலமாக உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் உயிரியல் தந்தையாக இருப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.