தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.

மீன்பிடித்தடை காலத்தில் மீனவர்களுக்கு 8000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 3ஆண்டுகள் பழமையான விசைத்தறிகளை மேம்படுத்த 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாகை, குமரி உள்ளிட்ட மீனவ பகுதிகளில் மீன்பிடி இறங்கு தளம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தனுஷ்கோடியில் பூநாரை பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார்.