மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் மும்மொழி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, மொழி என்பது தொடர்பு கொள்ள மட்டுமே உதவும். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உலக அளவில் ஒளிர்ந்து வருகிறது. ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 10 சர்வதேச மொழிகளை ஊக்குவிக்க முயற்சி எடுக்கப்படும். இந்தியை கற்றுக் கொண்டால் மக்களுடன் பழக எளிதாக இருக்கும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆங்கிலத்தையும், தெலுங்கையும் தங்கள் அரசு ஊக்குவிக்கும் என கூறியுள்ளார்.