
சென்னை மாவட்டம் கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே நேற்று மாலை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த மாணவர்கள் ரயில் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தகராறில் ஈடுபட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட 9 கல்லூரி மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.