
முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்தார். அவர் கூறியதாவது, அரியலூரில் பல திட்டங்களை தீட்டியதால் கம்பீரமாக உங்கள் முன் நிற்கிறேன். அரியலூரில் 3 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரியலூரில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய தடுப்பணையும், ரூ.15 கோடியில் 35 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டடம் கட்டப்படும்” என கூறியுள்ளார்.