
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விக்கிரவாண்டிக்கு விஜய் சென்று விட்டார். அங்கு கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டு வந்து நிலையில் தற்போது மாநாடு நடைபெறும் இடத்திற்கு பின்னால் அமைந்துள்ள ஒரு அறையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.
அதாவது நாளை மாநாடு நடைபெறும் நிலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் மாநாட்டுக்கு வருபவர்கள் மற்றும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் ஆலோசனை நடத்துகிறார். மேலும் விஜய் தங்குவதற்கு வசதியாக அப்பகுதியில் கேரவன் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயின் முதல் மாநாட்டிற்கு நாளை 6000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் பவுன்சர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.