
தமிழக அரசுக்கு மருத்துவப் பட்டம் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய பணிக்காலம் என்பது 2 வருடங்கள் இருந்த நிலையில் அதனை குறைக்குமாறு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை தற்போது அரசு ஏற்று அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. அதன்படி தற்போது மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய பணிக்காலத்தை 2 வருடத்திலிருந்து ஒரு வருடமாக அரசு குறைத்துள்ளது.
இது தொடர்பான அரசாணை இன்று வெளியான நிலையில் மருத்துவ மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் எம்டி மற்றும் எம்எஸ் உள்ளிட்ட மருத்துவம் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய பணிக்காலம் 2 வருடங்கள் இந்த நிலையில் தற்போது அது ஒரு வருடம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.