
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியினை அறிமுகப்படுத்தினார். அவருடைய கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சியாக பதிவு செய்துள்ளது. அதன் பிறகு இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். காலை முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜய்யும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டார்.
பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில் பறை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதன் தலைவர் விஜய் ஏற்றி வைத்துள்ளார். 100 அடிக்கும் மேல் உயரம் கொண்ட இந்த கொடி கம்பம் முழுக்க முழுக்க மின்மோட்டார் மூலம் கோடி ஏற்றும் நிகழ்வாகும் விஜய் அவர்கள் பச்சை நிற பொத்தான் ஒன்றை அமைக்க கொடி தற்போது கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் கொடியேற்றிய பிறகு அனைவரும் எழுந்து நின்று கொடிக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில் அவர் கட்சி கொடியை ஏற்ற போது மாநாடு திடலை அதிரும் அளவிற்கு கட்சியின் பாடல் ஒலித்தது. தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வருகிறது. மேலும் நடிகர் விஜய் கொடி ஏற்றிய பிறகு தமிழுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியுள்ளனர். இதைத்தொடர்ந்து உறுதிமொழி எடுத்து வருகிறார்கள்.
அதில் நமது நாட்டின் விடுதலைக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நம்முடைய அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் எப்போதும் பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பாதுகாக்க பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.
மக்களாட்சி மற்றும் மத சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து மக்கள் நல பணி செய்பவராக கடமை ஆற்றுவேன் என உறுதி எடுக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் போன்றவைகளில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். மேலும் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என உளமாற உறுதி கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.