தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். மேலும் UPSC முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு 50000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.