தமிழக வெற்றி கழகம் சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா ஜூலை 3 இன்று சென்னையில் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட வாரியாக விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடிகர் விஜயின் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா இன்று திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது இதனால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.