மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது. இதையொட்டி, மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான பொருட்களை விசைப்படகுகளுக்கு ஏற்றி கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்