
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் நிறுவனமானது கடந்த வருடம் அதானி குழுமம் பங்கு மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது அதானி குழுமம் மோசடிக்கு பயன்படுத்திய அதே வெளிநாட்டு நிறுவனங்களில் செபி நிறுவனத்தின் தலைவர் மாதவி புச் மற்றும் அவருடைய கணவருக்கும் பங்குகள் இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் செபி தலைவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்து இன்று நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் அதானி குழும முறைகேடு மற்றும் செபி தலைவருக்கு எதிரான புகார்கள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற இருக்கிறது.