மநீம கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் ஆ.பொன்னுசாமி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக கட்சி பொறுப்பில் இருந்து தான் ராஜினாமா செய்துக் கொள்வதாக பொன்னுசாமி, மநீம தலைவர் கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.