
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராசில் போலே பாபா ஆன்மீக கூட்டத்தில் உயிரிழப்புகள் நடந்ததற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்களே காரணம் என்று உத்தர பிரதேச அரசின் விசாரணை குழு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது ,கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என்று எல்லாவற்றிற்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.