
இந்தியாவில் வாழும் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடையின் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருள்களை மானிய விலையில் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் நியாய விலை கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு இன்று தான் கடைசி நாள்.
இந்நிலையில் பல பகுதிகளில் பருப்பு, பாமாயில் போன்ற ஏதேனும் ஒரு பொருளை வாங்கி விட்டு, மற்றொரு பொருளை இல்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் அரிசி,கோதுமை போன்ற பொருட்களை பெறாதவர்கள் www.tnpds.gov.in என்ற தளத்திலும், 1967 என்ற எண்ணிலும், tnepds என்ற செயலிலும் புகார் அளிக்கலாம். அத்துடன் தங்கள் நியாய விலை கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு நிலவரத்தையும் அறியலாம்.