
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருக்கும் பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் அழுகிய பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதனால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
இதேபோல் மற்றொரு இரண்டு கடைகளில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்திருந்த 4 1/2 கிலோ பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, மாம்பழம், வாழைப்பழம், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை ரசாயன பொருட்களை பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.