ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகள், பழ குடோன்களில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நீலமேகம் சென்னிமலை வட்டார பகுதியில் இருக்கும் மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு நடத்திய போது செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தது தெரியவந்தது.
இதனால் 30 கிலோ மாம்பழங்களை அதிகாரி பறிமுதல் செய்து அழித்துவிட்டார். இதனையடுத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடும்போது பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே இரசாயன பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.