கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  சாலை,  தகவல் தொழில்நுட்பம் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மக்களுடைய பிரச்சனை  எங்கு சென்றாலும் தகவல் கிடைக்கவில்லை. சாலைகள் துண்டிக்கப்பட்டு இருக்கிறது… சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்கள்….  ஆகவே இந்த அரசு உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும்.  தகவல் தொழில்நுட்ப தொடர்பை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன்.

தூத்துக்குடிக்கு போனேன்.  அங்கு  வெள்ள பாதிப்பு எல்லாம் பார்த்தேன்…. மக்களையும் பார்த்தேன்… திருநெல்வேலிக்கு வந்தோம்…. அங்க வெள்ள பாதிப்பு எல்லாம் பார்த்தோம்…. அங்கிருக்கின்ற மக்கள் சொல்வது கிட்டத்தட்ட மூன்று நாட்களாக எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை,  தண்ணீர் கிடைக்கவில்லை,  குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை,  மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று ஊடகத்தின் முன்பே அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆகவே இனியாவது இந்த அரசு தூங்கிக் கொண்டு இருக்காமல்  விழிப்போடு… வேகமாக… துரிதமாக மக்களுடைய பிரச்சனை…..இதை  அரசியல் ஆக்க நாங்கள் விரும்பவில்லை. மக்கள் உணவெல்லாம் மூன்று நாட்களாக பரிதவித்துக் கொண்டிருக்கிற காட்சி வெட்கக்கேடானது என தெரிவித்தார்.