
நடிகர் பிரித்திவிராஜ் எம்புரான் படத்தை இயக்கினார். இந்த படம் பல விமர்சனங்களை சந்தித்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு லூசிபர் என்ற திரைப்படம் மோகன்லால் நடிப்பில் ரிலீசானது. இந்த படத்தின் இரண்டாவது பாகமாக எம்பிரான் திரைப்படம் கடந்த 27-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன், கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
மலையாளத் திரை உலகில் ரூபாய் 250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற வரலாற்றைப் படைத்தது எம்புரான் திரைப்படம். அதிக வசூலை குவித்த மலையாள படம் என்ற மஞ்சுமெல் பாய்ஸ் ருபாய் 242 கோடி வசூலை விட்டது. இந்நிலையில் தற்போது எம்புரான் திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.