
இந்திய கடற்படை பெண் அதிகாரி ஒருவர் போர்க்கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாகும். இந்த பெண் அதிகாரியும், இவரது சகோதரரும் வேறு வேறு போர்க்கப்பல்களின் கமாண்டராக வேலை பார்த்து வருகின்றனர். இந்திய முப்படைகளில் பெண்கள் அதிகாரிகளாக பணி செய்யும் நடைமுறை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அக்னி வீர திட்டத்தின் கீழ் தற்போது ஆயிரம் பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதோடு போர்க்கப்பல்களின் 4 பெண் அதிகாரிகள் கடந்த 2021ல் இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
தற்போது மொத்தம் 40 பெண் அதிகாரிகள் வேலையில் உள்ளனர். ஆனால் தலைமை பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை மும்பையைச் சேர்ந்த பிரேர்னா தியோஸ்தலி என்ற பெண் முறியடித்துள்ளார். அவர் தற்போது முதன்முறையாக கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார். இவர் ஐஎன்எஸ் என்ற சென்னை போர் கப்பலில் முதல் லெப்படினன்டாக இருந்துள்ளார்.
இவர் ஐஎன்எஸ் டிரிங்கட் என்ற போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கப்பலுக்கு அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஒரு தீவின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் கனரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பலுக்கு கமண்டராக பிரேர்னாவின் தியோஸ்தலி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சகோதரரான இஷான் தியோஸ்தலியும் கடற்கரையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஐ எம் எஸ் விபூதி போர்க்கப்பலின் கமாண்டராக வேலை பார்த்து வருகிறார்.