நாம் வெளிநாட்டிற்கு செல்லும் போது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூகுள் மேப்பை பயன்படுத்துவது உண்டு. ஆனால் சில நேரத்தில் அந்த கூகுள் மேப்பும் தவறாக வழி காட்டுவதும் உண்டு. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரையன் ஜாக் கில்பர்ட் மற்றும் செபாஸ்டியன் ஃபிராங்கோயிஸ் கேப்ரியல் ஆகியோர் பிரான்சிலிருந்து கடந்த 7-ம் தேதி அன்று விமான மூலம் டெல்லிக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் இருவரும் பிலிபிட்டில் இருந்து தனக்பூர் வழியாக நேபாளத்தில் உள்ள காத்மாண்டு செல்ல இருந்தனர். இவர்களுக்கு வழி தெரியாததால் கூகுள் மேப்  உதவியோடு தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.

அப்போது கூகுள் மேப் அவர்களுக்கு பரேலியிலிருந்து பஹேரி வழியாக காத்மாண்டு செல்ல ஒரு குறுக்கு வழியை காட்டியது. அதை நம்பி பிரான்ஸ் இளைஞர்கள் இருவரும் சைக்கிளில் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் காத்மாண்டுக்கு போவதற்கு பதிலாக சுரைலி அணையை அடைந்தனர். இரவு முழுவதும் அங்கு சுற்றி வந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன்படி காவல் துறையினர் அந்த பிரான்ச் இளைஞர்களை பிடித்து கிராம அதிகாரி வீட்டில் தங்க வைத்து, அதன் பின் அவர்களுக்கு சரியான வழியை கூறி கடந்த வெள்ளி கிழமை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.