தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்றும் ஞானியார் தர்காவில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாக வனத்துறையினரிடம் அனுமதி வாங்காமல் தர்காவினர் யானையை வளர்த்து வந்தனர்.

இதுகுறித்த தகவலின் படி சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூருக்கு சென்று யானையை பார்வையிட்டனர். அங்கு யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என கூறி யானையை பறிமுதல் செய்து திருச்சியில் இருக்கும் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.

நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் குமார் தலைமையான வனத்துறையினர் யானையை முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த பெண் யானைக்கு 58 வயது ஆகிறது. நூற்றாண்டு பழமையான தர்காவில் இருந்து வனத்துறையினர் யானையை கைப்பற்றி சென்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதே நேரம் பாகன் நத்கர் பாதுஷா என்பவர் யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்துள்ளார்.