வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர், குருவராஜ பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக உணவு தேடி கிராமத்திற்குள் நுழைகிறது. அந்த குரங்குகள் தக்காளி, கத்தரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகிறது. மேலும் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்துகிறது.

இந்நிலையில் அரிமலை உட்பட பகுதிகளில் சுற்றி திரிந்த குரங்குகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் சென்று ஒவ்வொன்றாக 20 குரங்குகளை பிடித்துக் கூண்டுக்குள் அடைத்தனர். அந்த குரங்குகள் தர்மகொண்ட ராஜா கோயில் மலைப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.