கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு 17-ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் வெள்ளமலை எஸ்டேட் மட்டம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவான கால் தடயங்களை ஆய்வு செய்த போது சிறுத்தை தான் மேய்ச்சலுக்கு சென்ற கன்றுக்குட்டியை கடித்து கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட உள்ளது. இரவு நேரங்களில் கால்நடைகள் வெளியே சுற்றி திரிய விடாமல் உரிமையாளர்கள் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.