தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கசாமி. இவர் இன்று உடல்நல குறைவினால் காலமானார். முன்னாள் டிஜிபி ரங்கசாமியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் முன்னால் டிஜிபி ரங்கசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் டிஜிபி திரு. ரங்கசாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை கேட்டு நான் மிகவும் வருந்தினேன். அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.