
ஜெர்மனி நாட்டில் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (81) என்பவர் முன்னாள் ஜனாதிபதியும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமாக இருந்துள்ளார். இவர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் ஜெர்மனியின் ஜனாதிபதியாக கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை இருந்தார். 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இவர் கடந்த 2019 ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவர் கடந்த 1943ல் ஜெர்மனி கட்டுப்பாட்டில் இருந்து போலந்தில் பிறந்த இவர் தனது இளமைக் காலத்தை அகதிகள் முகாம்களில் கழித்தவர். பொருளாதார நிபுணரான இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜெர்மனியின் துணை நிதி அமைச்சராகவும், கடந்த 2000ல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.