
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம் பாளையம் பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ஆண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையை அடுத்து பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் முன்னாள் அமைச்சர் கே.செங்கோட்டையன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு மேளதாளம் ஒலிக்க ஸ்ரீதேவி,பூதேவியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.இதில் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது.
அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேள தாளங்களின் இசைக்கேற்ப ஆடிப்பாடி மகிழ்ந்து பெருமாளுக்கு மாலை அணிவித்தார். இக்காட்சியை அங்கு கூடி இருந்த பக்தர்கள் கண்டு களித்தனர் ,சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.