
இந்திய கடற்கரையில் அதிகாரியாக வேலை பார்த்து குல்பூஷண் ஜாதவ் ஓய்வு பெற்றார். அதன் பின் அவர் ஈரானின் சபாஹ ரில் ஒரு தொழிலை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரை கடந்த 2016ம் ஆண்டு ஒரு கும்பல் கடத்திச் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியது. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் கோர்ட் மரண தண்டனை வழங்கியது. இது எதிர்த்து இந்தியா வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோட்டு உத்தரவிட்டதால், கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அவரை ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்ல உதவிய தீவிரவாதியான முப்தி ஷா மிர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். பலுசிஸ்தானின் துர்பட் பகுதியில் முப்தி ஷா மிர்ரை, மோட்டார் சைக்கிளில் வந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தப்பி சென்றார்.