சென்னை தீவு திடலில் கடந்த மாதம் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி என இரு தினங்கள் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண்பதற்கு ஏராளமான மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலர் சென்றிருந்தார்கள். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற இந்த பார்முலா 4 கார் ரேஸ் ஆசியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் 3-ம் சுற்று போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிகள் இரு காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார்பந்தய ஓடுதளத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டிகள் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.