
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எட்டு கோடி மக்களால் நிறுவப்பட்ட அரசால் செய்ய முடியாத ஒன்றை ஒரு தனி மனிதன் போக்குவரத்தை நடத்திடுவான், தண்ணீரை சரியாக வினியோகம் பண்ணிடுவான், கல்வியை கொடுத்திடுவான், மருத்துவத்தை நல்லா கொடுத்துடுவான் என்று நீங்கள் ஏற்கிறீர்களா?
இப்ப ஏன் சூரிய ஒளி மின் உற்பத்தி, சோலார் உற்பத்தி, காற்றாலை உற்பத்தியை தனியாருக்கு கொடுத்துக்கிட்டு வாறீங்க. ஏன் அரசு வச்சுக்கல. ஒரு அடிப்படை தேவை மின்சாரம். மின்சாரம் இல்லாது எந்த இயக்கமும் இல்லை என்று தெரியும் போது…. தனி முதலாளி கிட்ட போனா நாளைக்கு அவன் தீர்மானிப்பது தான கட்டணம். அப்புறம் என்ன பண்ணுவீங்க ? இலவசம் என்பது வளர்ச்சியே கிடையாது.
என் மக்கள் வீதியிலே இறங்கி மிக்சி தா, கிரைண்டர் தா, எனக்கு பஸ் கட்டணம் ஃப்ரீயா தான்னு கேட்கவே இல்லையே. நாங்க கேட்டதை எதை கொடுத்து இருக்கீங்க. நாங்க 5,000 ஏக்கர்ல ஏர்போர்ட் கேட்டோமா ? இருக்கின்ற ஏர்போட்ல பறக்குறதுக்கு பிளைட் கேட்கிறோம். நீ அதை தர முடியல ? ஐயாயிரம் ஏக்கர்ல எதுக்கு எனக்கு ஏர்போர்ட் ? சொந்தமா ஒரு பிளைட் இல்லாத நாடு உலகத்துல பார்த்து இருக்கீங்களா ? DMKவின் 30 மாத ஆட்சி, செயல்பாடு எப்படி இருக்கு என்ற கேள்விக்கு, அது குறித்து பேசி என்னுடைய வார்த்தையை நான் வீணடிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.