
தமிழக அரசியலில் சமீபத்தில் நடந்த மாற்றங்களால் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக, செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் தனது நியமனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தெரிவித்து தனது சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டார்.
அவர் கூறியதாவது, செந்தில் பாலாஜியின் தியாகத்தை குறித்து நான் வாழ்த்தியதை பலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கட்சிக்கு எதிரான சதி செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் விளைவாக தான், அவர் 15 மாதம் சிறை தண்டனையை ஏற்றுக் கொண்டார்.
தன்னால் இயக்கத்திற்கு எந்த ஒரு களங்கமும் வரக்கூடாது என்று நினைப்பவரால் தான், இந்த இயக்கம் இயங்குகிறது. என்னை தாங்கி பிடித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். வாழ்நாள் முழுவதும் உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.