
நாட்டில் பொதுவாக மாதத்தின் முதல் நாள் பல்வேறு திட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள் குறித்த விதிகள் அமலாகும். அந்த வகையில் இன்று அக்டோபர் 1ஆம் தேதியை முன்னிட்டு வரப்போகும் புதிய ரூல்ஸ் மற்றும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி,
சிலிண்டர் விலை:
சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படும் நிலையில் கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்தது. இதனால் இன்று சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை உயருமா குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிஎஃப் கணக்கு:
இன்று முதல் பி எஃப் கணக்குகளில் 3 விதிகள் அமலாகிறது. அதன்படி என்ஆர்ஐ யாரேனும் பிஎப் கணக்குகளில் தகவலை அப்டேட் செய்யாமல் இருந்தால் அதற்கு இன்று முதல் வட்டி செலுத்தப்பட மாட்டாது. அதன் பிறகு பிஎஃப் கணக்கு ஒன்றுக்கு மேல் இருந்தால் நாளை முதல் மெயின் கணக்கிற்கு வட்டி வரவு வைக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களுடைய கணக்கிலேயே இனி வட்டி வைக்கப்படும் போன்ற மூன்று விதிகள் அமலாகிறது.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்:
இது ஒரு பெண் குழந்தைகளுக்கான திட்டமாகும். இதில் அமலாகும் புதிய விதிகளின்படி பெண் குழந்தைகள் பெயரில் தாத்தா அல்லது பாட்டி கணக்கு தொடங்கி இருந்தால் அந்த கணக்கு குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பெயருக்கு மாற்றப்படும். இதில் கூடுதலாக 2 கணக்குகளுக்கு மேல் தொடங்கினால் அந்த கூடுதல் கணக்குகள் மூடப்படும்.
ஆதார் மற்றும் பான் கார்டு விண்ணப்பங்கள்:
இன்று முதல் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் பதிவு ஐடியை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டார்கள். இதன்மூலம் பான் கார்டுகளின் தவறான பயன்பாடு மற்றும் நகல்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
HDFC கிரெடிட் கார்டு லாயல்டி திட்டம்:
இந்த வங்கியின் கிரெடிட் கார்டில் லாயல்டி திட்டம் மாற்றப்படும் நிலையில் Smartbuy பிளாட்பார்மில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்டுகளை மீட்டெடுப்பதெற்கு ஒரு காலண்டர் காலாண்டில் ஒரு தயாரிப்பு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
ATF And CNG-PNG விகிதங்கள்:
Air turbine Fuel மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி போன்றவற்றின் விலைகளும் எண்ணைய் விலைகளும் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும் நிலையில் இன்றும் அறிவிப்பு வெளியாகலாம். கடந்த மாதம் ஏடிஎப் விலை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம் கார்டு:
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன டிராய் வங்கிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகள் துளைத்து முறையாக பதிவு செய்த வங்கிகளின் மெசேஜ் மட்டும் தான் வாடிக்கையாளர்களை சென்றடையும். ஒருவேளை செல்பேசி நிறுவனங்களில் பதிவு செய்யவில்லை எனில் அந்த வங்கிகளின் எஸ்எம்எஸ் வாடிக்கையாளர்களை சென்றடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால் இன்று முதல் பதிவு செய்யாத நிறுவனத்தில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.