தமிழகத்தில் இன்று முதல் பத்திரிக்கை பதிவு அலுவலகம் இயக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும். இதுபோன்று ஞாயிற்றுக்கிழமை ஆவண பதிவு செய்யப்பட்டால் விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த துறையில் வேலைப்பார்க்கும்  அலுவலர்களுக்கு மாற்று விடுமுறை வழங்கப்படும் என்றும் பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 3ம் நாள் முகூர்த்த நாள் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்திற்கு 100-க்கு  பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன் வழங்கப்படும். அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் 100 அலுவலங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 2 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல்  முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.