
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி காலை 7 முதல் 9 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. மனிதர்களை விண்கலத்தில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் 400 கிலோமீட்டர் கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 400 கிலோமீட்டருக்கு விண்கலத்தில் கொண்டு சென்று பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதே ககன்யான் திட்டம் ஆகும். மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது இஸ்ரோ.
Mission Gaganyaan:
The TV-D1 test flight is scheduled for
🗓️October 21, 2023
🕛between 7 am and 9 am
🚩from SDSC-SHAR, Sriharikota #Gaganyaan pic.twitter.com/7NbMC4YdYD— ISRO (@isro) October 16, 2023