
தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இதனை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ். ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீ காந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் ராம்சரண் 2 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின்ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமாக உள்ளது.